மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுயேச்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? நீங்களே பாருங்க!!
சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற மொத்த வாக்குகள் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் மாபெரும் வெற்றிபெற்று விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் முக. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
நடந்து முடிந்த இந்த தேர்தலில் முன்னணி காட்சிகள் சார்பாகவும், சுயேட்சையாகவும் சில சினிமா நடச்சத்திரங்கள் போட்டியிட்டனர். குறிப்பாக திமுக சார்பாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றிபெற்றார். மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமலஹாசன் நூலிழையில் வெற்றியை நழுவவிட்டார்.
இவர்களை தவிர நடிகைகள் குஷ்பூ, ஸ்ரீபிரியா ஆகியோரும், நடிகர்கள் சினேகன், மயில்சாமி, உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் கடந்த தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.
இறுதியில் மன்சூர் அலிகான் தான் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 428 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.