மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஜா: லட்சக்கணக்கில் நண்கொடை கொடுத்த நடிகர் சூர்யா குடும்பம். எத்தனை லட்சம் தெரியுமா?
தமிழ் திரைஉலகில் மிகவும் பிரபலமான குடும்பம் என்றால் அது நடிகர் சிவகுமார் குடும்பம்தான். சிவகுமார் தொடங்கி அவரது மூத்த மகன் சூர்யா, இளையமகன் கார்த்தி, சூர்யா மனைவி ஜோதிகா என அனைவருமே சினிமா பிரபலங்கள்தான். மேலும் இவர்களது குடும்பம் சினிமா என்பதையும் தாண்டி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துவருகின்றனர்.
அதிலும் குறிப்பாக விவசாயத்திற்கு என்றால் சற்று அதிகமாகவே உதவிகள் கிடைக்கும். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் மூலம் கிடைத்த லாபத்தைக்கூட விவசாயிகளுக்காக உதவி செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கிறது தமிழகம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிகள் கிடைத்துவருகின்றன. இந்த புயலால் பல விவசாய நிலங்கள், மரங்கள், ஆடு, மாடு அனைத்து அழிய, மக்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் சூர்யா தன் குடும்பத்தினர் சார்பாக ரூ 50 லட்சத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியாக கொடுத்துள்ளார்.