144 உத்தரவை மதிக்காமல் மதியம் 1 மணிக்கு மேல் சுற்றி திரிந்தால் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..!



after-1-clock-anyone-going-out-take-chiver-action

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் கொரோனாவால் தமிழகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு பாதிப்பு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தது.

corona

இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் மதியம் 1 மணிக்கு மேல் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி திரியும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.