#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தூய்மைப்பணியாளர் மகனுக்கு தேர்தலில் வாய்ப்பளித்த அதிமுக..!
நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தூய்மைப்பணியாளரின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளது. நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களால் தீவிர களப்பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதுரை மாநகர வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் எட்வின் பிரபு என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். எட்வின் பிரபுவின் தந்தை துப்புரவு பணியாளராக இருந்து வருகிறார். அவரது மகனுக்கு அதிமுக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக எட்வின் பிரபு தெரிவிக்கையில், "எனது பகுதியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் எனது தந்தையை போல தூய்மை பணியாளர்கள் தான். அவர்களின் குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத வறுமையில் இருக்கிறார்கள்.
நான் தேர்தலில் வெற்றியடையும் பட்சத்தில், அவர்களுக்கு இலவச வை-பை வசதியை ஏற்படுத்தி கொடுத்து, அவர்களின் படிப்புக்கு உதவி செய்வேன். மக்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.