96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தலைக்கேறிய குடிபோதை..! அடுத்தவர் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அதிமுகவின் முக்கிய பிரபலம்.! புரட்டியெடுத்த குடும்பத்தார்.!
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும், குன்னூர் நகர்மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி அன்று அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்துள்ளார். அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கோபியும் குடும்பத்தாரும் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை அடி வெளுத்து வாங்கியுள்ளனர். அப்போது கோபாலகிருஷ்ணன் இருந்த நிலைமையை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் இதுதொடர்பாக குன்னுர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து கோபியின் குடும்பத்தார் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும் தன்னை தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.