#Breaking: "கேமிரா மட்டும் இல்ல, காலிலேயே விழுந்திருப்பர்" - அமைச்சர் மூர்த்தியை கலாய்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!



AIADMK Jayakumar Trolls Minister Moorthy 

 

அமைச்சரின் மாண்பை உணராத அறிவில்லாத அமைச்சார்களால் அரசு வழிநடத்தப்படுகிறது என ஜெயக்குமார் கடுமையான விமர்சனத்தை தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.அறிந்த 108 வது பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த நிர்வாகி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில்.!

உண்மை மறைக்கப்பட்டுள்ளது

அப்போது, அவர் பேசுகையில், "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு இருக்கை தரப்படவில்லை. ஸ்டாலினின் மகன் உதயநிதி, உதயநிதியின் மகன் இன்பநிதி, அவரின் நண்பர்கள் உட்கார வேண்டும் என ஆட்சியரை நிற்க வைத்துள்ளார்கள். ஆட்சியர்களை எதிர்த்து பேசினால் என்ன நடக்கும் என தெரிந்து, அவர் உண்மையை மறைகிறார். 

சர்வாதிகார ஆட்சி

இடியமின் மன்னராட்சியின் சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கிறது. இந்த விசயத்திற்கு அலங்காநல்லூர் சம்பவமும் ஒரு சாட்சி. அமைச்சர் என்பதற்கு என கண்ணியம், மாண்பு உள்ளது. இன்பநிதிக்கு சால்வை அணிவிக்க வேண்டிய காரணம் என்ன? கேமிரா இல்லை என்றால் இன்பநிதியின் கால்களில் கூட அமைச்சர் மூர்த்தி விழுந்திருப்பார். 

கடும் விமர்சனம்

அரசியல், பொதுவாழ்க்கை, அமைச்சரின் மாண்பு என்பதை கூட உணராமல், அறிவில்லாத அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இது வேதனையை தருகிறது" என பேசினார். முன்னதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், நிகழ்ச்சியை தொடங்கி வைக்க மகனுடன் வந்த துணை முதல்வர் உதயநிதி, இன்பநிதி உட்கார அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியரை பின்னால் செல்ல அறிவுறுத்தியதாக வீடியோ வெளியாகி, அதனை பாஜக அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்து விவாதத்தை ஏற்படுத்தியது கூப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழகத்தில் உறுதி செய்யப்பட்ட எச்எம்பிவி வைரஸ்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசுக்கு கோரிக்கை.!