எண்ணூரில் திடீரென கசிந்த அமோனியா வாயு; 30 பேருக்கு உடல்நலக்குறைவு.!



Ammonia gas suddenly leaked in Ennoor

 

சென்னையில் உள்ள 800 பகுதியில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு அப்பகுதியை சார்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். 

தற்போது இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமோனியா கசிவை உறுதி செய்துள்ளது. மேலும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கேஸ் பைப் உடைப்பு உடனடியாக சீர் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

எண்ணூர்

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் ஆலையில் இந்த அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.