மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலமேடு: மூதாட்டியின் மீது மோதிய அரசு பேருந்து... சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழந்த சோகம்....
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து உள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் - சின்ன பாப்பா தம்பதியினர். சின்ன பாப்பாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பாலமேடு பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார்.
அப்போது ஒசூரிலிருந்து தர்மபுரிக்கு செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று பாலமேடு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. அதில் எதிர்பாராத விதமாக பேருந்துக்காக காத்திருந்த சின்ன பாப்பாவின் மீது மோதியுள்ளது.
அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டியின் தலை மீது பேருந்தின் முன்புற சக்கரம் ஏறியது. இதில் சின்ன பாப்பா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பாலக்கோடு போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பேருந்து ஓட்டுனர் வெங்கடாஜலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.