#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடப்பாவமே.... காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து... ஒரு தலை காதலன் வெறிச்செயல்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை காவல்துறை வலை வீசி தேடி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்தவர் பிரிசில்லா என்ற ப்ரியா (19), இவர் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருமலை புரத்தைச் சார்ந்த கருப்பசாமி என்ற வாலிபர் பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பிரியா மறுப்பு தெரிவித்த போதும் அவர் பிரியாவை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார்.
இந்நிலையில் வழக்கம் போல் பிரியா நேற்று இரவு பணி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆட்டோ திருமலை புறத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஆட்டோவை வழிமறித்த கருப்புசாமி ஆட்டோவில் இருந்த பிரியாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்.
இதற்கு ப்ரியா மறுப்பு தெரிவித்ததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி ஓடி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் பிரியாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே பிரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை பிரியாவை குத்திவிட்டு தப்பி ஓடிய கருப்பசாமியை தேடி வருகிறது.