மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேர்ந்து வாழ மறுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.... கணவர் மற்றும் மாமனார் செய்த வெறிச்செயல்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்ந்து வாழ மறுத்த இளம் பெண் மீது அவரது கணவர் மற்றும் மாமனார் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் இவருக்கு அன்பு என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அவ்வப்போது குடும்பத்தினர் தலையிட்டு சமரசம் பேசி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்ந்து அன்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் மகாராஜன் அன்பு வை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அன்பு அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மகாராஜன் மற்றும் அவரது தந்தை சுடலை முத்து ஆகியோர் அன்புவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அன்பு வை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் lஅன்பு கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் மகாராஜன் மற்றும் மாமனார் சுடலைமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.