திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மா - அப்பா இல்லாதப்ப.., 14 வயது சிறுமியை காதலில் வீழ்த்தி, 9 மாத கர்ப்பிணியாக்கிய இரண்டு 16 வயது சிறார்கள் கைது..!
ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, அவரின் வாழ்க்கையினை சீரழித்த காதலன் மற்றும் 16 வயது சிறுவனின் கொடூரத்தால் 14 வயதில் சிறுமி 9 மாத கர்ப்பிணியாக மாறிய துயரம் நடந்துள்ளது. பதின்ம வயதில் ஏற்பட்ட பருவக்காதல் ஈர்ப்பால் சிறுமியின் வாழ்க்கை கேள்விக்குறியான துயரம் குறித்து விவரிக்கிறது செய்தித்தொகுப்பு.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் சிலுவைச்சேரி கிராமத்தில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் 16 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இதே கிராமத்தில் 9 ஆம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ஆம் வகுப்பு மாணவன் 14 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்த நிலையில், நாளடைவில் பல கம்பிக்கட்டும் கதை சொல்லி அதனை காதலாக மலர வைத்துள்ளான். இந்த நிலையில், சிறுவன் சிறுமியிடம் நான் உன்னையே திருமணம் செய்கிறேன் என ஆசைவார்த்தை கூறி இருக்கிறான்.
பதின்ம வயதில் ஏற்பட்ட பருவ எதிர்பாலின ஈர்ப்பை காதலாக பாவித்து மதிமயங்கி இருந்த சிறுமியும் கயவனின் ஆசை வார்த்தையில் மயங்க, இதனை தனக்கு சாதகமாக்கி சிறுவன் பலமுறை சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறான். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையில், சிறுமி பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள மற்றொரு சிறுவனிடம் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், இதனால் சிறுமியின் நடத்தையில் மாற்றம் உள்ளது என அவரை சீரழித்த காமக்காதலன், அவருடன் கொண்ட காதலை கைவிட்டதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், சிறுமியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டு, வயிறு பெரிதாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் நீர் கட்டியாக இருக்கலாம். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். நீர்க்கட்டிக்கு எதற்கு மருத்துவமனை என வீட்டிலேயே வைத்தியம் பார்த்துள்ளனர். அதாவது, மேற்கூறிய 10 ஆம் வகுப்பு மட்டுமே பயின்ற 16 வயது சிறுவன், சிறுமியின் பெற்றோர் கரும்பு வெட்ட தினக்கூலியாக வெளியூர் செல்லும் நேரத்தில் சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி அவனும் அத்துமீறி இருக்கிறான்.
நாளுக்கு நாள் சிறுமியின் வயிறு பெரிதாக, சந்தேகமடைந்த பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 9 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், பதினோராம் வகுப்பு பயிலும் மாணவன் மற்றும் பத்தாம் வகுப்பு பயின்று இடைநின்ற மாணவரின் செயல்பாடுகள் தெரியவரவே, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. இருவரின் மீதும் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.