திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமியை சீரழித்து குழந்தை திருமணம்.. பிரசவத்தின் போது அகப்பட்ட கொடூரன்..!
குழந்தை திருமணம் செய்த வாலிபர், சிறுமியின் தாயார் உட்பட 3 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கல ராஜ். இவர் புதுப்பாளையம் கிராமத்தில் கூலி வேலைக்கு செல்கையில், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய நிலையில், அவரை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமாகவே, விஷயம் அவரின் தாய் செல்விக்கு தெரியவந்துள்ளது. அவர் உறவினர்களுடன் பேசி, அடைக்கல ராஜை சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். சிறுமி பிரசவத்திற்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியிடம் மருத்துவர்கள் வயது குறித்து விசாரணை செய்கையில், அவருக்கு 15 வயது ஆவது உறுதியானது. இதனால் குழந்தைகள் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் விசாரணை செய்தபோது உண்மை தெரியவந்தது.
இதனையடுத்து, அடைக்கலராஜ், அவரது தந்தை ராமசாமி, சிறுமியின் தாயார் செல்வி ஆகியோரின் மீது புகார் அளிக்கப்பட்டு, அடைக்கலராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், சிறுமியின் தாய் செல்வி, அடைக்கலராஜின் தந்தை ராமசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.