திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொண்ட 7 மாத கர்ப்பிணி பலி; பெண்களே விபரீதம் வேண்டாம்.. அரியலூரில் சோகம்.!
![Ariyalur Jayankondam Women Died Abortion pill on 7 Month of Pregnancy](https://cdn.tamilspark.com/large/large_pregnant-f-47857.jpg)
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், புதுக்குடி கரைமேடு கிராமத்தில் வசித்து வருபவர் வீரமணி. இவரின் மனைவி ரமணா. தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 7 மாத கர்ப்பிணியாக இருந்த ரமணா, மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்.
இதற்காக அங்கிருந்த தனியார் மருத்துவ மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சுயமாக சாப்பிட்டதாகவும் தெரிய வருகிறது. இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர், உறவினர்களால் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு பெண் சிசு அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு ரமணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரையின்றி எடுத்துக்கொள்வது எந்த மாதிரியான விளைவை உண்டாக்கும் என்பதற்கு இச்சோக சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது.