சடலத்துடன் திருப்பூருக்கு இரயிலில் வந்த பயணிகள்.. பதறவைக்கும் பகீர் சம்பவம்..!



Assam to Coimbatore Train Tiruppur Railway Station Died Body

ஜோலார்பேட்டைக்கு வந்துகொண்டு இருந்தவர் இரயிலிலேயே இறந்துவிட்ட நிலையில், அவரின் உடலை திருப்பூர் வரை கொண்டு வந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சாரில் இருந்து கோயம்புத்தூருக்கு வாரத்திற்கு ஒருமுறை இருமார்கத்திலும் இரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி சில்சாரில் இருந்து புறப்பட்ட இரயில், நேற்று திருப்பூர் வந்தது. இரயிலின் S3 பெட்டியில் கம்பளி போர்த்தியபடி ஒருவரை இறக்கிய 2 பேர், அவரை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். 

இரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிரா மூலமாக இதனை கவனித்த அதிகாரிகள், விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இறந்தவர் அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் பகுதியை சேர்ந்த அரபிந்த் ராய் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. இவர் பெங்களூரில் செக்யூரிட்டியாக பணியாற்றுகிறார்.

அசாமில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வர இரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், நேற்று காலை 06:55 மணிக்கு ஜோலார்பேட்டைக்கு சிறையில் வந்துள்ளது. இரயில் நிலையத்தில் அரபிந்த் ராய் இறங்கவில்லை. அவருடன் பயணித்தவர்கள் எழுப்ப முயற்சித்தும் பலனில்லை. 

Tiruppur

சோதனையில் அவர் இறந்தது உறுதியாகவே, அவரின் செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் திருப்பூரில் உடலை இறக்கி வைக்கச்சொல்ல, இறந்த உடலுடன் அனைவரும் 4 மணிநேரம் பயணித்து திருப்பூர் வந்துள்ளனர்.

இதனையடுத்து, அரபிந்த் ராயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் விசாரணையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், முதற்கட்டமாக அரபிந்த் ராயின் உறவினர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.