#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடும்பை கொன்று ஜோசியர் செய்த மோசமான காரியம்! யூடியூப் வீடியோவால் திருமணமான 4 நாளில் நேர்ந்த பரிதாபம்!
திருச்சி மாவட்டம் மணியங்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவர் பெரியசாமி. இவர் ஜோசியராக உள்ளார். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வசிய மை தயாரிப்பது குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தடை செய்யப்பட்ட உடும்பை பிடித்து, அதன் உறுப்புகளை தனி தனியாக அறுத்து காய வைத்து வசிய மை தயாரிப்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி, சமீபத்தில் வனத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் அவசரமாக ஜோசியம் பார்க்க வேண்டுமென வனத்துறையினர் கூறி பெரியசாமியை வரவழைத்து, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரியசாமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்து, மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.