மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா? ஜோதிடர் பாலாஜி கணிப்பு!



astrologer balaji talk about MK Stalin

கடந்த ஜனவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜோதிடர் பாலாஜி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி கூறுகையில், இந்த ஆண்டு கணிப்பின் படி, 2019 உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடக்கிறது.

இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில், இந்தியா, நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணியுடன் மோதும்.

2019ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை, இதுவரை வெல்லாத அணியே கைப்பற்றும் என்று கூறியிருந்தார். இந்த தொடரில் கேன் வில்லியம்சன் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்றும் கணித்திருந்தார். இந்தநிலையில் அவர் கூறியிருந்த படியே அனைத்தும் நடந்தது.

MK Stalin

இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜோதிடர் பாலாஜி இந்திய அணியின் தோனி உடனே ஓய்வு பெற வாய்ப்பு இல்லை. அவரது ஜாதக படி 2019 குருப்பெயர்ச்சிக்கு பிறகு அவரது ஓய்வை அறிவிப்பார். அல்லது T20 உலககோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிப்பார் என கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் உள்ளாட்சி தேர்தல் பற்றியும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா என்றும் கேட்டபோது, அதற்கு பதிலளித்த பாலாஜி ஹாஸன் உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெரும் என்றும், மேலும் முக.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் கூறியுள்ளார்.