#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிமகன்களின் அட்டூழியம்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சொமேட்டோ ஊழியர்.. போலீசார் விசாரணை..!
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்துரில் வசித்து வருபவர் திருமலைவாசன். இவர் சோமேட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருமலைமலைவாசன் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் செல்லும் வழியில் உணவு டெலிவரி செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த தணிகாச்சலம் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் திருமலைவாசன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதனையடுத்து திருமலைவாசன் இந்த விபத்துக்கு குறித்து அவர்கள் இருவரையும் தட்டிக் கேட்கவே மது போதையில் இருந்த பார்த்திபன் மற்றும் தணிகாச்சலம் கடுமையாக திருமலைவாசனை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த திருமலைவாசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்த நிலையில் தலைமறைவாகியுள்ள தணிகாச்சலம் என்பவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.