மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டு பகுதியில் ஆடு மேய்த்த சிறுமியை அந்த ஆட்டோ டிரைவர்,..! மூச்சிறைக்க ஓடி வந்து ஊருக்குள் சொன்ன சிறுமி...!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, குண்ணவாக்கம் அருகில் உள்ள குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று உள்ளார்.
அங்கே 2 சிறுமிகள் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அவர்களில் சுமார் 11 வயதுடைய சிறுமி ஒருவரை தனியாக அழைத்து சென்ற சுரேஷ் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அது காட்டு பகுதியாக இருந்த காரணத்தினால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி சுரேசுடன் சென்ற சிறுமியை தேடி சென்றுள்ளார். அப்போது சுரேஷ் சிறுமியை வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி ஓடி ஊருக்குள் சென்று இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்களிடம் தகவல் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மக்கள் கூட்டமாக வருவதை கண்ட சுரேஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுரேஷிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.