ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
முதுகு, கழுத்து வலிக்கு தீர்வு.. இனப்பெருக்க மண்டலத்திற்கு ஆரோக்கியம்.. எளிமையான பட்டாம்பூச்சி ஆசனம்.!

யோகாசனத்தில் பலவிதமான ஆசனங்கள் உள்ளன. இவற்றில், பட்டாம்பூச்சி ஆசனம் என்பது தசைகளை தளர்வடைய செய்யும். முதுகு வலி மற்றும் கழுத்து வலி பிரச்சனையால் அவதிப்படும் பலருக்கும், இந்த ஆசனம் நல்ல பலனை தரும். பட்டாம்பூச்சி ஆசனம் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது டைட்ஸி ஆசனம், பாத கோனாசனா என்றும் அழைக்கப்படுகிறது.
பட்டாம்பூச்சி ஆசனம் செய்ய இரண்டு கால்களும் இடுப்பு பகுதியை நோக்கி இருக்குமாறு நெருக்கமாக இழுத்து வைக்க வேண்டும். இரண்டு கைகளையும் இறுக்கமாக ஒன்றிணைத்து அதனை செய்ய வேண்டும். இதனால் இறக்கைகள் போல் கால்கள் அசைந்தாடுவதால், அது பட்டாம்பூச்சி ஆசனம் என பெயர் பெற்றது.
முதலில் கால்களை தரையில் நீட்டியவாறு அமர்ந்து, இரண்டு கால்களையும் மடக்கி இருக்க வேண்டும். காலங்களின் பாதங்கள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு நேராக இருக்கும் பட்சத்தில், பாதங்களின் மீது கைகளை குவித்து இறுக்கமாக வைக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து, மூச்சினை உள்ளே இழுத்து, இரண்டு கால்கள் மற்றும் தொடையை மேலும், கீழுமாக அசைக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
முதுகெலும்பு பிரச்சனை காரணமாக அவதியடைந்த பலருக்கும் இது பேருதவி செய்யும். தொடை எலும்புக்கும் கூடுதல் அழுத்தம் கொடுக்காமல், முதுகு தசை பகுதிகளுக்கு இதமளிக்கும். இடுப்புக்கு அருகே குதிங்காலை வைப்பதால், கீழ் முதுகு பகுதியானது தளர்வாகும். முதுகு தசைகளும் வலிமையாகும். முதுகு, தலை, கழுத்து பகுதிகளும் தளர்வடைகிறது.
இதனால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் சீராக சென்று, தலைவலி பிரச்சனையை குறைக்கும். மனக்கவலையையும் குறைந்து மன நலத்தையும் பாதுகாக்கிறது. மேலும், பெண்களுக்கு கருப்பையின் செயல்பாட்டை மேம்படுத்தி, இனப்பெருக்க அமைப்புக்கு தேவைப்படும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. உடலின் சோர்வு மற்றும் சோம்பல் பிரச்சனை சரி செய்யப்படுகிறது.