திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய்யா?! பெண் நிர்வாகிகளுக்கு கட்டளை போட்ட பூஸ்ஸி ஆனந்த்!!
நடிகரும், விஜய் மக்கள் இயக்க தலைவருமான நடிகர் ஜோசப் விஜய் தற்போது அவரது மக்கள் இயக்க பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். விஜய்யின் விலையில்லா உணவகம், பள்ளி மாணவர்களுக்கு உதவி என்று மிகவும் ஆக்டிவாகவே இருக்கிறார்.
அவ்வப்போது, மக்கள் இயக்க பொறுப்பாளர்களை சந்தித்து பேசி வரும் அவர், இயக்க பணிகள் குறித்து விசாரித்து வருகிறார். தற்போது, சென்னை அடுத்த பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் பூஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க வந்த நிர்வாகிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நிர்வாகிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு பெண் நிர்வாகிகளுக்கு பதில் அளித்தார் பூஸ்லி ஆனந்த். அப்போது அதில் ஒரு பெண் நிர்வாகி எழுந்து பூஸ்ஸி ஆனந்த் அவர்களிடம் கேள்வி கேட்டிருந்தார். அதில், எங்க எல்லாருக்கும் ஒரே ஆசை தான் விஜயை பார்க்க வேண்டும். நான் மிக பெரிய விஜய் ரசிகை என்று கூறினார். அதற்கு பூஸ்ஸி ஆனந்த் 'யாரும் விஜய்னு சொல்ல கூடாது தளபதினு தான் சொல்லணும்' என்று கூறியுள்ளார்.