"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அசுரர்களுக்கும் - சூரர்களுக்கும் இடையே நடக்கும் போர்; சிங்கமாய் கர்ஜிக்கும் வினோஜ் பி செல்வம்.. அதிரடி பேச்சு.!
2024 மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க, பிரத்தியேக வியூகம் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலப்பணிகளை எடுத்துரைத்து பாஜக பிரம்மாண்ட அளவிலான பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல பாஜக மத்திய அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளுடன் மக்கள் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தொடர்ந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற பிரதமரின் கல்பாக்கம் அணுமின் நிலைய வருகை மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாஜக பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
இதற்காக பிரதமர் வரும் வழிநெடுக மக்களும், பாஜக தொண்டர்களும் திரண்டு உற்சாக வரவேற்பும் அளித்தனர். பிற முக்கிய ஏற்பாடுகள் அனைத்தையும் அக்கட்சியின் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மேற்கொண்டு இருந்தார். தொடர்ந்து கட்சிப்பணிக்காக அவர் அயராது உழைத்து வருகிறார்.
பாஜக-வுக்கும் திமுகவுக்கும் நடக்கும் போர் தேர்தல் போர் இல்லை...
— Vinoj P Selvam (@VinojBJP) March 4, 2024
அட்டூழியம் செய்யும் அசுரர்களுக்கும் மக்களுக்கு ஊழியம் செய்யும் சூரர்களுக்கும் இடையே நடக்கும் போர்!
2024 தேர்தல் சூரசம்ஹாரத்தின் தொடக்கம்.. pic.twitter.com/HWk0XUpeGc
சமீபத்தில் அவர் பிரச்சாரம் பேசுகையில், "உங்களின் (முக ஸ்டாலின்) தகப்பனார் (கருணாநிதி) வந்தால் கூட பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது. எங்களின் பாரத பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி அடைவதை, மெரினாவில் உறங்கிக்கொண்டிருக்கும் உங்களின் தகப்பனார் வந்தாலும் தடுக்க இயலாது.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியது முதல், விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பியது வரை பலகோடி சாதனைகளை படைத்துள்ள பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையும். நமது பிரதமர் சொத்துமதிப்பை விட, தமிழ்நாட்டில் உள்ள திமுக கவுன்சிலர்கள் சொத்து மதிப்பு என்பது அதிகம் ஆகும்.
என் மண் என் மக்கள் யாத்திரையில், மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டை பிடித்திருக்கும் அரக்கன் திமுகவை ஆட்சியில் இருந்து வீட்டிற்கு விரட்டியடிப்பதே அந்த சபதம் ஆகும்.