மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பாஜக பிரமுகர் கைது.!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 47). பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், பாஜக சிறுபான்மை அணி முன்னாள் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் எட்வர்ட் அண்ட் கோ என்ற சமூக வலைதளத்தில் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தக் குழுவில் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக விமர்சித்து நேற்று முன்தினம் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்த புகாரின் அடிப்படையில் சாத்தான்குளம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எட்வர்ட் ராஜதுரை கைது செய்துள்ளனர்.