ரஜினி, ஜெயலலிதா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!
சென்னை பேயாஸ்கார்டனில் நடிங்கர் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீடுகள் உள்ளது. இதனையடுத்து, சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை சுமார் 6 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீட்டில் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கப்போகிறது என்று கூறிவிட்டு வைத்து விட்டார்.
இந்தநிலையில், போலீசார் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால், போலீசார் நடத்திய சோதனையில் எந்தவித வெடிபொருளும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போன்கால் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய நபர் கோவையை சேர்ந்த வாலிபர் என்று தெரியவந்தது. சென்னை, காவல் துறையினர் கொடுத்த தகவலின் பேரில் அந்த வாலிபரை கோவை காவல்துறையினர் பிடித்தனர்.
அவருடைய பெயர் முகமது அலி என்பதும், மனஅழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் போயஸ் கார்டனில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது