#Breaking #பொதுச்சின்னம் வழங்க சட்டத்தில் இடமில்லை!! ஆனாலும் பரீசளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!!



case-on-cooker-logo


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 24 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. மேலும் அணைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

ttv dinakaran

இந்தநிலையில் அமமுக-விற்கு  குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் கோரப்பட்டது.  அமமுக ஒரு கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்பதால் அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது.  

அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து மார்ச் 25-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. 

டி.டி.வி.தினகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, எங்களுக்கு நேரம் இல்லை  வேட்பு மனு தாக்கல் நாளை 26.03.2019 மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது என்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ttv dinakaran

இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பதிவு செய்யப்படாத கட்சிக்கு இடைக்காலமாக குக்கர் சின்னம் வழங்கியது சட்டப்படி முரணானது. பதிவு செய்யப்படாத கட்சிக்கு எப்படி பொதுச்சின்னத்தை ஒதுக்க முடியும்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இந்தநிலையில் அமமுகவை கட்சியாக பதிவு செய்கிறோம், குக்கர் இல்லை என்றால் வேறு ஒரு பொதுச்சின்னம் தரவேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து அமமுகவை இன்றே பதிவு செய்தாலும் குக்கர் அல்லது பொதுசின்னத்தை உடனே தர முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

பொதுச்சினம் வழங்க சட்டத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில் இதுகுறித்து பரீசளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.