மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Accident: நின்றுகொண்டிருந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதி 3 இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே பலி..! புத்தாண்டு நாளில் சோகம்..!!
புத்தாண்டு கொண்டாடிவிட்டு வந்த 3 இளைஞர்கள் விபத்தில் மரணித்த சோகம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் கோலாகலமாக சிறப்பிக்கப்பட்டது. பலரும் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு குடும்பத்துடன் பயணித்து ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.
தமிழகத்தை பொறுத்த வரையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட பல மாவட்டத்தில் இருக்கும் மக்கள் சென்னை நோக்கி படையெடுப்பது இயல்பு என்பதால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக நள்ளிரவில் காவல் துறையினர் சார்பில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டு இருந்தது. அப்போது, புத்தாண்டை கொண்டாடிவிட்டு 3 இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். இவர்கள் பயணித்த வாகனம் நின்று கொண்டு இருந்த லாரியின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 இளைஞர்களும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர்கள் நாகராஜ், ரிச்சர்ட், பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.