மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காப்பகத்தில் தங்கிருந்த பெண்களிடம் பாலியல் சீண்டல்; வீடியோ வெளியானதால் அதிரடி கைது.!
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர், பனங்காட்டுபாக்கம் பகுதியில் அன்பழகன் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்தி வரும் உரிமையாளர் வீரமணி. இங்கு மனவளர்ச்சி குன்றிய நபர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என ஐம்பது பேர் வசித்து வருகிறார்கள்.
காப்பகத்தை நடத்தி வரும் வீரமணி, அங்கு இருக்கும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிகிறது. இது குறித்து பெண்மணி சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்தார்.
இதன் பேரில் தாம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகையில் உண்மை அம்பலமாகவே, வீரமணியை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அங்கிருந்தவர்கள் மற்றொரு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.