மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் குவிக்கப்படும் போலீசார்! உச்சகட்ட பாதுகாப்பில் மெரினா கடற்கரை.
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பை பலப்படுத்த தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் பொங்கல் களைகட்டத் தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் கிராம மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. ஏனெனில் விவசாயம் தொடர்பான விழாவாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் சென்னையைப் பொருத்தவரையில் அதி விமரிசையாக கொண்டாடப் படவில்லை என்றாலும் காணும் பொங்கல் அன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளம் ஆண்டுதோறும் அலைமோதுகிறது.
காணும் பொங்கல் பண்டிகைக்கு சென்னை மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்.
— AIADMK (@AIADMKOfficial) January 14, 2019
இதனால் கடற்கரையில் கூடும் மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பினை வழங்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்துவருவதாக காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.