"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
மக்களே உஷார்! சென்னையில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின்சாரம் இருக்காதாம்.!
நாளை சென்னையில் அடையாறு, வேளச்சேரி, கே.கே நகர் போன்ற பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் இப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.கே. நகரில் பம்மல் நல்லதம்பி தெரு, சக்தி விநாயகர் தெரு, கட்டபொம்மன் தெரு, அன்னை காந்தி வீதி, தந்தை பெரியார் வீதி, அண்ணா பிரதான சாலை மற்றும் முதல் செக்டார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல வேளச்சேரியில், தாம்பாரம் பிரதான சாலை, நூறடி சாலையின் சில பகுதி, தண்டீஸ்வரம் காலினி, திரௌபதி அம்மன் கோயில் வீதி, லக்ஷ்மிபுரம், ஜானகி வீதி காந்தி சாலை, கிழக்கு மாட வீதி, சீதாபதி நகர், ஜெயந்தி வீதி, ரவி வீதி மற்றும் சாந்தி வீதி ஆகியவற்றில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது
அடையார் மற்றும் சாஸ்திரி நகர் பகுதிகளில், கிழக்கு மாட வீதி, அண்ணா வீதி, பிள்ளையார் கோயில் வீதி, முதல் கடல்பார்வை சாலை, தென்மாட வீதி, மேட்டு வீதி, மேற்கு டாங் வீதி, வடமாட வீதி, வால்மீகி வீதி, சன்னதி தெரு, சித்ராய்குலம் மற்றும் குப்பம் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.