சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
#Breaking: சென்னை கோல்ட் லோன் வங்கி நகைகள் கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது.!

550 சவரன் நகைகள் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னையில் உள்ள அரும்பாக்கம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கியின் பெட் கோல்ட் லோன் நிறுவனத்தில், நேற்று 550 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியில் 3 ஊழியர்கள் மட்டும் இருந்த நேரத்தில் 3 மர்ம நபர்கள் கொண்ட குழு மயக்க மருந்து தெளிந்து கொள்ளையை அரங்கேற்றி இருந்தது.
விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் தனிப்படை அமைத்து பரபரப்புடன் செயலாற்ற, பகீர் தகவலாக வங்கியில் ஊழியராக பணியாற்றி வரும் முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் கொள்ளையை அரங்கேற்றியது அம்பலமானது. இதனையடுத்து கொள்ளை கும்பலுக்கு வலைவீசப்பட்டது.
இந்நிலையில், கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொள்ளையடிக்கப்பட்ட நகையுடன் தப்பி சென்ற முருகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவனிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.