மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் பேருந்தில் கணவருடன் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; காவலர் என கூறி பகீர் செயல்.!
சென்னையில் உள்ள ஆவடியில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணம் செய்த இரவு நேர மாநகர பேருந்தில் தம்பதி பயணம் செய்துகொண்டு இருந்தனர். அப்போது, தம்பதியின் பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண், உறங்குவது போல நடித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி கணவரிடம் விஷயத்தை கூற, அவர் ஆணிடம் கண்டித்து இருக்கிறார். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அடாவடியக பேசிய ஆணோ, தன்னை ஆவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் என்றும் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என்ன செய்வது என்று விழிபிதுங்கி, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகவே, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆவடி காவல் நிலையத்தில் அவர் பணியாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.