ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
மனநலம் பாதிக்கப்பட்ட 55 வயது பெண் பலாத்காரம், கொலை.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. பேரதிர்ச்சி சம்பவம்.!

வீட்டில் இருந்து வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ஆவடி, திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் முதல் தெருவில், கட்டுமான பணிகள் நடந்து வரும் வீட்டில் பெண்ணொருவர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த திருநின்றவூர் காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்த பெண்மணி திருநின்றவூர் நத்தம்பேடு, அண்ணாநகர் பகுதியை சேர்த்த பாக்கியலட்சுமி (வயது 55) என்பது தெரியவந்தது. இவரின் கணவர் ஓய்வுபெற்ற இரயில்வே ஊழியர் அழகேசன். பாக்கியலட்சுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தினமும் வீட்டில் இருந்து வெளியேறி இரவில் வீட்டிற்கு வந்துவிடுவார்.
கடந்த 30 ஆம் தேதி வெளியே சென்ற பாக்கியலட்சுமி வீட்டிற்கு வராத நிலையில், அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவரின் சடலம் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் உறுதியானது.
இதனையடுத்து, விசாரணையை துரிதப்படுத்திய காவல் துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கிருந்த கண்காணிப்பு சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்கையில், பாக்கியலட்சுமியை திருநின்றவூர், நடுக்குத்தகை பாடசாலை தெருவில் வசித்து வரும் குப்பை பொறுக்கும் தொழிலாளி சக்திவேல் (வயது 30) இழுத்து சென்றது தெரியவந்தது.
நத்தமேடு காவல் துறையினர் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது அம்பலமானது. இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. சக்திவேலை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.