#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவன் அழைத்தும் நோ சொன்ன மனைவி... கணவன் செய்த பகீர் காரியத்தால், 2 பேர் உயிர் ஊசல்.!
தன்னுடன் குடும்பம் நடத்த மறுப்பு தெரிவித்த மனைவியை கணவன் கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் வாலிபருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
சென்னையில் உள்ள அயனாவரத்தை சேர்ந்தவர் மதார் (வயது 48). இவர் இறைச்சிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சர்பினிஷா (வயது 45). இவர் சொந்தமாக அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவியை பிரிந்த மதார், அரக்கோணத்தில் தனியே வசித்து வருகிறார். நேற்று முன்தினத்தில் அயனாவரம் வந்த மதார், மனைவி சர்பினிஷாவை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.
அப்போது, தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த மதார் மறைத்து எடுத்து வந்த கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். சர்பினிஷாவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் (வயது 37) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் ஒன்றுதிரண்ட நிலையில் மதார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கத்திக்குத்து தாக்குதலால் காயமடைந்த சர்பினிஷா மற்றும் மணிகண்டனை மீட்ட பொதுமக்கள், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அயனாவரம் காவல் துறையினர், விசாரணை நடத்தி மதாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.