திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: சென்னையில் காவல்துறையினர் தரமான சம்பவம்.. அதிகாரிகளை தாக்கி தப்பமுயன்ற 2 ரௌடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!
சென்னையில் உள்ள சோழவரம் பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதி வழியாக குற்றவழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகளான சதீஷ் மற்றும் திவாகர் ஆகியோர் பயணம் செய்ததாக தெரிய வருகிறது.
இவர்களை காவல் அதிகாரிகள் கைது செய்ய முயன்ற போது, அவர்களிடமிருந்து தப்பித்து செல்லும் நோக்கில் இருவரும் பயங்கர ஆயுதங்களால் காவலர்களை தாக்கி இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு கருதி துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், நிகழ்வு இடத்திலேயே இருவரும் பலியாகினார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட தகவலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.