பெண் காவலர்கள் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; நடந்தது என்ன? வெளியான ஆடியோ.!



chennai-ennore-womens-station-cop-died-case

மேல்மருவத்தூர் பகுதியில் 2 காவலர்கள் உயிரிழந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளரின் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

 

சென்னையில் உள்ள எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், உதவி காவல் ஆய்வாளராக வேலை பார்த்தவர் ஜெயஸ்ரீ, காவலர் நித்யா. இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பலாத்கார வழக்கில் தொடர்புடைய கிஷோர் என்ற இளைஞரை தேடி மதுரைக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மேல்மருவத்தூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் பலியாகினர். 

உனது வழக்கு விசாரணைக்கு சென்ற காவலர்கள் பலி

இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்த ஆவடி மாநகர காவல்துறை ஆணையராக, அவர்கள் தனிப்பட்ட முறையில் பயணம் செய்தபோதே மரணம் நிகழ்ந்தது என தெரிவித்தனர். இதனிடையே, கிஷோர் மீது புகார் அளித்த மாணவிக்கு தொடர்புகொண்ட எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர், உனது வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யச் சென்று காவலர்கள் பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 26 வயது செவிலியருடன் பலமுறை உல்லாசம்; திருமணம் செய்ய மறுத்த டாக்டரை கம்பி எண்ண வைத்த காதலி.!

chennai

ஆடியோ வெளியானது

கிஷோர் குறித்து உதவி ஆய்வாளர் மாணவியிடம் விபரங்களை கேட்டறிந்ததாகவும், உனது வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும் காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி பேசி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. 

பலாத்காரம்

கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து இளம்பெண்ணை ஏமாற்றிய கிஷோர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

chennai

சில நாட்களில் கண்டறியப்பட்ட குற்றவாளி

அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்த ஜெயஸ்ரீ தலைமறைவான கிஷோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். சில நாட்களில் குற்றவாளியை அவர் கண்டறிந்துவிட்ட நிலையில், பைக்கில் புறப்பட்ட மறுநாளில் வாகன ஏற்பாடு செய்து கொடுப்பதாக காவல் ஆய்வாளர் கூறிய நிலையில், காத்திருக்காமல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டவர்கள் இறுதியில் சடலமாக திரும்பி இருக்கின்றனர்.

தற்போது வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி இன்னும் தனக்கான நீதி கிடைக்க வேண்டும் என போராடுகிறார். அவரிடம் அத்துமீறிய கிஷோர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தெரியவருகிறது.
 

இதையும் படிங்க: ஆட்டோ - டூவீலர் மோதல்: தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.!