தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
26 வயது செவிலியருடன் பலமுறை உல்லாசம்; திருமணம் செய்ய மறுத்த டாக்டரை கம்பி எண்ண வைத்த காதலி.!
அம்மாவிடம் உன்னை அறிமுகம் செய்கிறேன் என செவிலியரை அழைத்துச் சென்று திருமண ஆசை காண்பித்து பலாத்காரம் செய்து கைவிட்ட மருத்துவர் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயது செவிலியர்
சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் பில்ரோத் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் கெளதம். இவரிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண்மணி, செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்டோ - டூவீலர் மோதல்: தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.!
அத்துமீறல்
இதனிடையே, செவிலியரின் மீது ஆசை கொண்ட மருத்துவர், அவரிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசையாக பேசி பலமுறை அத்துமீறி இருக்கிறார். இதனால் செவிலியர் கருவுற்றபோது கருக்கலைப்பு செய்துள்ளார்.
புகாரின் பேரில் கைது
இதனால் செவிலியர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் மருத்துவர் கௌதமை இன்று கைது செய்தனர். சமூக ரீதியாக காரணம் காண்பித்து திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை பிரிவிலும் புகார் பதிவு செய்யப்பட்டு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 19 வயது இளம் திமுக நிர்வாகி மரணம்., அலட்சியமாக வேடிக்கை பார்த்தவாறு வாகனம் ஓட்டியவரால் சோகம்;