மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டோ - டூவீலர் மோதல்: தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.!
பணிக்கு சென்றுகொண்டு இருந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர் புவனேஸ்வரன் (வயது 27), நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: குடிநீர் குழாய் பள்ளத்தில் விழுந்து 2 வயது சிறுவன் பலி; அலட்சியத்தால் நேர்ந்த சோகம்.. குடும்பமே கண்ணீர்.!
ஆட்டோ - டூவீலர் மோதல்
அப்போது, அவரின் இருசக்கர வாகனம் மீது, ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர், படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், புவனேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வரனின் மறைவு அவரின் குடுமப்த்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BigNews: மேல்மருவத்தூர்: குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் பயணம்; உதவி ஆய்வாளர் உட்பட பெண் காவலர்கள் இருவர் பரிதாப பலி.!