தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தலைநகரை உலுக்கியெடுத்த வெப்பம்; கொதிகொதிக்கும் சென்னையால் வறுபடும் மக்கள்.!
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவின் வெப்பநிலை என்பது 40 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் நிலவி வரும் உச்சபட்ச வெப்பநிலை காரணமாக 19 பேர் தற்போது வரை பலியாகி இருக்கின்றனர்.
ஆசிய பகுதிகளில் 2024 கோடைகாலம் அதிக வெப்பம் பதிவான காலமாக மாறியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட கோடையை குளிர்விக்க அக்னி நட்சத்திரத்தின் மழை வந்தது. சமீபத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, மீண்டும் தமிழக பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கசந்த வாழ்க்கை; பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.!
சென்னையில் கடும் வெப்பம் பதிவு
வங்காள விரிகுடா கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்குவங்கம் - வங்கதேசம் நோக்கி சென்று கரையை கடந்த நிலையில், மழை மேகங்கள் அனைத்தும் புயலில் வடபகுதிக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக இயல்பு வெப்பநிலை என்பது 40.5 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகி இருக்கிறது. ஜூன் 02ம் தேதி வரை வெப்பநிலை என்பது கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டின் வெப்பம் குறைந்தாலும், சென்னையில் வெப்பம் அப்படியே பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அப்படிப்போடு..! இனி சென்னை பேருந்து படிக்கட்டுகளில் தொங்கல் பயணத்துக்கு ஆப்பு - அதிரடி செயல்.!