ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
செல்போன் பறிப்பில் 23 வயது இளம்பெண் பரிதாப பலி; வலிமை திரைப்பட பாணியில் சென்னையில் சோகம்.!

சென்னையில் கடந்த இரண்டாம் தேதி இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ப்ரீத்தி என்ற 23 வயது பெண்ணிடம் இருவர் செல்போன் பறிக்க முயன்றனர்.
இதில் இரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று அவர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், செல்போனை பறிக்கும் செயலில் ஈடுபட்ட விக்னேஷ், மணிமாறன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.