மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரடைப்பால் பெண் காவலர் பரிதாப பலி; சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தபோதே பறிபோன உயிர்.!
சென்னையில் உள்ள செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் ஜெயசித்ரா (வயது 49). இவர் அயனவாரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்து தினமும் பணிக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த ஜெயசித்ரா, தனது சகோதரியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அவர் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி வாந்தி எடுத்து மயங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: பள்ளி வேன் ஓட்டுனருக்கு மாரடைப்பு; நொடியில் 20 மாணவ-மாணவிகளின் உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!
மாரடைப்பால் பலி
இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு ஜெயசித்ராவை பறிபோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஜெயசித்ராவின் குடும்பத்தினர் மற்றும் சக காவலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாதத்தின் முதல் நாளே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?