பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
லேடிஸ் ஹாஸ்டல் இளம் பெண்கள்தான் குறி..! காலை 7-8 தான் மெயின் டைம்..! 34 பெண்களிடம் இளைஞர் செய்த காரியம்..!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரே மாதிரியாக நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
விடுதியின் வைஃபை இணைப்பில் பிரச்சனை இருப்பதாக கூறி, தான் அதை சரி செய்ய வந்திருப்பதாகவும், வைஃபை இணைப்பில் உள்ள பிரச்னையை சரி செய்ய பெண்கள் அனைவரும் தங்கள் செல்போனை ஒரே இடத்தில் சார்ஜ் போடவேண்டும் எனவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதனை நம்பி ஒருசில பெண்கள் ஒரே இடத்தில் சார்ஜ் போட்டுள்ளனர்.
ஒரே இடத்தில் இருக்கும் அணைத்து செல்போனைகளையும் அந்த நபர் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இதுபோன்று சுமார் 34 பெண்களின் செல்போன்களை அந்த மர்மநபர் திருடியதாக கூறப்படுகிறது.
காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அந்த நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். மேலும், CCTV யில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுடன் அவர் நடமாடியதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடந்த விசாரணையில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார் பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்த பாலாஜி(31) என்பவரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.