மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றிய மனைவி.. அலேக்காக அழைத்துச்சென்று போட்டுத்தள்ளிய கணவன்.!
கள்ளக்காதல் வயப்பட்ட மனைவி சொல்லியும் கேட்காத ஆத்திரத்தில் கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மேம்பால கட்டிடப்பணிகள் நடைபெறும் இடத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மணாலி காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? என்ற விசாரணையில் அவர் திருவெற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த மணிமாறன் மனைவி மைதிலி (வயது 38) என்பது தெரியவந்தது. இவர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர் ஆவார். தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருவெற்றியூரை சேர்ந்தவர் ஜெய்சங்கர்.
இந்நிலையில், ஜெய்சங்கருக்கும் - மைதிலிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்துள்ளனர். மேலும், தனிமையான இடத்திற்கு சென்று உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இப்படியான தருணத்தில், கடந்த 3 ஆம் தேதி திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் மணிமாறன் நின்றுகொண்டு இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில், மைதிலி ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கியுள்ளார். இதனைக்கண்ட மணிமாறன் இருவரிடமும் தகராறில் ஈடுபடவே, இனியொருநாள் என் மனைவியுடன் உன்னை கண்டால் தொலைத்துவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை திருவெற்றியூர் காவல் நிலையம் வந்த மணிமாறன், மனைவியை 2 நாட்களாக காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி மணிமாறன் மனைவியை பாலம் வேலை நடந்த வழியே அழைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, மணிமாறனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மனைவியின் கள்ளக்காதல் பழக்கத்தால் கொலை நடந்தது அம்பலமானது. உண்மையை அறிந்த காவல் துறையினர் மணிமாறனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.