மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னையும், வாழ்க்கையையும் சீரழிச்சிடீங்களேடா.. ரிலேஷன், டீச்சர் னு எல்லாம் அரக்கனுக - மாணவி தற்கொலை..! 3 பக்க அதிர்ச்சி கடிதம்.!!
சமீபமாகவே பள்ளி மாணவிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் சோகங்கள் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் கயவர்களால் கொடூர கொலையும் நடைபெறுகிறது. பாலியல் ரீதியான அத்துமீறலை எதிர்கொள்ளும் சிறுமிகள், மனதளவில் பெரும் துயருக்கு உள்ளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்கின்ற பெரும் சோகம் அதிகரித்துள்ளன.
சென்னையில் உள்ள மாங்காடு பகுதியை சார்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி, பாலியல் தொல்லை தாங்க இயலாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுமி கடந்த சில வருடமாக பெரும் துயரை அனுபவித்து வந்த நிலையில், தற்கொலைக்கு முன்னதாக அவரால் எழுதப்பட்ட கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீருடன் மாணவி எழுதியுள்ள கடிதத்தில், "எனக்கு வாழ பிடிக்கவில்லை. கொடூரமான சமூகத்தில் தவறான எண்ணத்துடன் இருப்பவர்களை ஏன் கடவுள் படைத்தது இருக்கிறார்?. நான் கஷ்டப்படவேண்டும் என கடவுள் படைத்துள்ளார். என்னை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. என்னை பலரும் தவறாக உபயோகம் செய்துவிட்டனர். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என் மனதில் அந்த யோசனை ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆறுதல் கூற யாரும் இல்லை.
இதனை வெளியில் சொன்னால் என்னை தவறாக பேசுவார்கள். தப்பான எண்ணத்தோடு பெண்களிடம் பேசவிடக்கூடாது. யாரையும் நம்ப முடியவில்லை. உறவினர்களை சுத்தமாக நம்ப முடியவில்லை. யார் என்னை இப்படி செய்தார்கள் என எனக்கு தெரியும். பெண் என்று கூட பார்க்காமல் கொடுமை செய்தார்கள். நீ டீச்சருக்கு பிறந்தவன் என்று சொல்லாதே. நீ இருக்கவே கூடாது. கடவுள் உன்னை தண்டிப்பார். பாலியல் துன்புறுத்தலை தடுக்க வேண்டும். இதற்கு மேல் என்னால் முடியாது. மனசு வலிக்கிறது.
ஆறுதல் கூற யாரும் இல்லாமல், நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை. கனவில் வந்து தொல்லை ஏற்படுகிறது. படிக்க முடியவில்லை. சமூகத்தில் பாதுகாப்பே இல்லை. எனது கனவுகள் குறைந்துவிட்டது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என பெற்றோர்கள் மகன்களிடம் சொல்லிக்கொடுங்கள். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்ப வேண்டாம். அனைவரும் வேட்டையாடுகிறார்கள். அம்மா இன்னொரு உலகத்திற்கு போயிட்டு வருகிறேன். உலகிலேயே பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவையும் தான்.
பள்ளிக்கூடத்தில் கூட பாதுகாப்பு இல்லை. எனக்கு நியாயம் வேண்டும். உடலை மட்டும் பார்த்து பழகும் நபர்கள் ஆண்மைக்கு தகுதி இல்லாதவர்கள். மோசமான உலகத்தில் பிறந்து, மற்றொரு உலகத்திற்கு செல்கிறேன். பாலியல் பலாத்கார பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும். எனக்கு நியாயம் வேண்டும்" என்று எழுதியுள்ளார். மேலும், அருகில் கடிதத்தையும் வரைந்து இருக்கிறார்.
இந்த கடிதத்தின் பேரில் காவல் துறையினர் சந்தேக வலையில் உள்ள 3 பேரை விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.