திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Breaking#: மெட்ரோ ரயில் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை நிறுத்தம்!
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதன் அடுத்த நடவடிக்கையாக சென்னை மெடீரோ ரயில் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக கீழ்கண்ட இரண்டு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
1. சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோரயில் சேவைகள் இன்று முதல் 31.03.2020 நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது.
2. மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் 31.03.2020 நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது.
மேலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி, அரசுடன் இணைந்து செயல்படுமாறு மாண்புமிகு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
CMRL has decided to stop the Metro Rail Services till 31st March 2020 as per government order#ChennaiMetro pic.twitter.com/uHmkaeNieU
— Chennai Metro Rail (@cmrlofficial) March 22, 2020