தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
படிக்கட்டு பயணம்.. இனி ஓட்டுநர், நடத்துனர் மீது தான் நடவடிக்கை - போக்குவரத்துத்துறை அறிவிப்பு.!
பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கப்ட்டில் பயணம் செய்து, ஏதேனும் புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் மாநகராட்சி சார்பாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவிகள் பிரதானமாக பயணம் செய்து வருகின்றனர். இவர்களில் மாணவர்கள் பெரும்பாலும் ஆபத்தை உணராமல், பேருந்திற்குள் இடம் இருந்தாலும் படிக்கட்டுகளை பிடித்து தொங்கியவாறு ஆபத்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பேருந்தின் ஜன்னல், மேற்கூரை என இவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பல விபத்துகளும் நேர்ந்துள்ள நிலையில், இதனை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பொதுமக்கள் என யார் தட்டிக்கேட்டாலும், அவர்களை கூட்டமாக சேர்ந்து தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இது போதாதென பள்ளி, கல்லூரிகள் இடையேயான மோதலும் பேருந்து பயணத்தில் நடக்கிறது.
இந்த நிலையில், பேருந்தில் மாணவர்கள் தொங்கியவாறு பயணம் செய்யும் பட்சத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரித்து இருக்கிறது.
போக்குவரத்துத்துறையின் செய்திக்குறிப்பில், "ஓட்டுநர், நடத்துனர், பள்ளி - கல்லூரிகளுக்கு அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்து விதமான பேருந்தையும் நிறுத்த வேண்டும். மாணவர்கள் பேருந்திற்குள் ஏறி பயணம் செய்யும் வகையில் போதிய இடவசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டு வேண்டும். பயணிகளின் கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில், கூடுதல் பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட பணிமனைகளுக்கு தகவலை தெரியப்படுத்த வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்னரே பேருந்து இயக்கப்படவேண்டும்.
தணிக்கையில் ஈடுபடும் நபர்கள், வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் நேரங்களில் படிக்கப்பட்டு பயணத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மற்றும் பிற நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.