மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை மக்களை வாட்டி வதைக்கும் சளி, இருமல், காய்ச்சல்.. காரணம் என்ன?.. எச்சரிக்கை விடும் மருத்துவர்கள்.!
தலைநகர் சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சளி, காய்ச்சல், இருமலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள், இளம் தலைமுறையை சேர்ந்த பலரும் அவதிப்படுகின்றனர். இதனால் சென்னையில் இருக்கும் அரசு, தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெளிநோயாளிகள் பிரிவிலும் வழக்கமான நோயாளிகளை விட கூடுதலாக 25 % பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இவ்வாறான இருமல் குறைந்தது 2 வாரத்திற்கு நீடித்து இருக்கிறது. மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் பலனில்லை. குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து வருகின்றனர்.
சளி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க கரண்டி தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான சளி, காய்ச்சல் பிரச்சனைக்கு வானிலை மாற்றமும் காரணமாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைசர் உபயோகம் என இருந்து வந்தோம்.
ஆனால், இன்றளவில் அனைத்தும் மாறிவிட்ட நிலையில், வைரஸ் விரைவில் பரவி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண சளி என்று அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை வறட்சி, வயிற்று வலி போன்ற பிரச்னையும் ஏற்படுகிறது. இதனால் மக்கள் சுதாரிப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.