மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே உஷார்! மெரினாவில் குவிக்கப்படும் போலீசார்! மெரினாவில் பலத்த பாதுகாப்பு!
கடந்த மூன்று நாட்களாக தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
விழாக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் சுற்றுலா தளங்களில் அதிகம் ஒன்றுகூட வாய்ப்புள்ளதால் சென்னை மெரினா கடற்கரையை சுற்றி போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடபட்டுள்ளது.
மேலும் மக்கள் கடலில் இறங்கி குளிக்க அதிகம் வாய்ப்புள்ளதால் சென்னை மெரினாவில் மக்கள் குளிக்கவும், கடலுக்குள் இறங்கவும் சென்னை காவல்துறை தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இணை ஆணையர் பாலகிருஷ்ணன் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டும், மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டும் கூடுதலாக 15 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் கடலருகே சென்றுவர இரண்டு இரு ஜிப்சி வாகனங்கள் காந்தி சிலை மற்றும் உழைப்பாளர் சிலை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.