மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை முதல் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடு... நிரம்பி வழியப்போகும் பேருந்துகள்..!
சென்னை நகரின் பிரதான போக்குவரத்துக்கு மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் புறநகர் மின்சார இரயில் சேவைகள், நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னை பல்லாவரம் - கூடுவாஞ்சேரி இடையே பகுதி நேரமாக இரத்து செய்யப்படுகிறது.
காலை 10:30 மணிமுதல் பிற்பகல் 02:30 மணிவரையிலும், இரவு 10 மணிமுதல் 12 மணிவரையிலும் இரயில்கள் இயக்கப்படாது. தாம்பரம் இரயில்வே யார்டு பணிகள் நடைபெறுவதால், மேற்கூறிய நேரங்களில் புறநகர் மின்சார இரயில் சேவைகள் என்பது பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: காதலித்து தனிமையில் நெருங்கும்போது தெரியாத ஜாதி, திருமணத்திற்கு தெரியுதாம்.. கொரோனா கால காதலன் கைது.!
கூடுதல் எம்.டி.சி பேருந்துகள் இயக்கம்
இதனால் இரயில்கள் இயக்கப்படாத நேரத்தில் கூடுதலாக எம்.டி.சி பேருந்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள் கூடுதலாகவும், கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள் கூடுதலாகவும் இயக்கப்படுகிறது.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வே பகுதிக்கு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் பயணம் செய்யும் பேருந்துகள், இந்து மிஷன் மருத்துவமனையில் 14 ம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலனின் வீட்டில் காதலி மர்ம மரணம்.. உடலெல்லாம் காயங்கள்.. பெற்றோர் கண்ணீர் குமுறல்.!