மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்து தனிமையில் நெருங்கும்போது தெரியாத ஜாதி, திருமணத்திற்கு தெரியுதாம்.. கொரோனா கால காதலன் கைது.!
மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். இவர் தற்போது மும்பையில் செயல்பட்டு வரும் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த கொரோனா தொற்று காலத்தில், விக்னேஸ்வரனுக்கு தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
முதலில் நட்பாக பழகி வந்த ஜோடி, பின்னாளில் காதல் வயப்பட்டு இருக்கிறது. இளம்பெண் சென்னையில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த நிலையில், இவர்கள் இருவரும் நேரிலும் சந்தித்துக்கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில் காதலியிடம் ஆசை வார்த்தையை அள்ளிவிட்ட விக்னேஷ், தாம்பரத்தில் தனியாக அறையெடுத்து கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலனின் வீட்டில் காதலி மர்ம மரணம்.. உடலெல்லாம் காயங்கள்.. பெற்றோர் கண்ணீர் குமுறல்.!
காதலுக்கு ஜாதி தடையில்லை, திருமணத்திற்கு தடை?
ஆண்டுக்கு 2 முதல் 3 முறை காதலியை சந்தித்துவிட்டு சென்ற விக்னேஸ்வரன் குறித்த தகவலை இளம்பெண் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, மகிழ்ச்சி செய்தியை காதலனுக்கு தெரிவித்தபோது காதலிக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அதாவது, இரண்டு பெரும் வேறு ஜாதி என்பதால், திருமணத்திற்கு முடியாது என கூறி இருக்கிறார்.
இதனால் அதிர்ந்துபோன காதலி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் மும்பையில் இருந்த இளைஞரை கைது செய்து தாம்பரம் அழைத்து வந்தனர். அங்கு திருமணம் குறித்து பேசியபோது, அவர் திட்டவட்டமாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இளைஞரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முன்னாள் காதலனை கரம்பிடிக்க கணவரை பலிகொடுத்த மனைவி; 18 வயது மகனும் உடந்தையாக பகீர் சம்பவம்.!