#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திமுக பங்குடன் பெட்ரோல் குண்டு தாக்குதல்?.. பாஜக முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி..! தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி.!!
பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினாலும், அதற்கு நாங்கள் பயம் கொள்ளமாட்டோம் என பாஜக கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தார்.
சென்னையில் உள்ள தி. நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அங்கு மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்படவே, இந்த விஷயம் தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வினோத் என்பவரை கைது செய்தனர்.
வினோத்திடம் தற்போது அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்திற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாஜக கராத்தே தியாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
அந்த பேட்டியில், "பாஜக மாநில தலைமை அலுவலகத்தின் மீது நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக இதனைப்போன்ற நிகழ்வு திமுகவின் பங்குடனே நடைபெற்றது. பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்கெல்லாம் நாங்கள் பயம்கொள்ளமாட்டோம்" என்று தெரிவித்தார்.