கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
நீ எதுக்குடா நல்லா வேலை பார்க்குற?.. பொறாமையில் பொங்கி நண்பனையே கொன்றுதீர்த்த துரோகிகள்.! சென்னையில் பயங்கரம்.!!
தன்னைவிட நண்பன் சிறந்த முறையில் வேலைகளை கவனித்து நண்பன் கூடுதல் சம்பளம் வாங்கியதால் பொறாமையடைந்த 2 நண்பர்கள் நண்பனையே போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் தனியார் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இந்த கட்டிடத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 22), சக்திவேல் (வயது 25), பிரசாந்த் (வயது 25) ஆகியோர் சென்டரிங் வேலை செய்து வருகின்றனர். நேற்று இவர்கள் மூவரையும் பார்க்க சீனிவாசன் என்பவர் சென்றுள்ளார். நால்வருமாக சேர்ந்து 3-வது மாடியில் மதுபானம் அருந்தியுள்ளனர்.
அப்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் எழவே, ஆனந்தனிடம் அருகேயிருந்த தென்னை மரத்தின் தேங்காயை காண்பித்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இப்படியே கட்டிடத்தின் ஓரத்திற்கு ஆனந்தை அழைத்து வந்த மூவரும், ஆனந்தனை கீழே தள்ளிவிட்டு இருக்கின்றனர். இரத்த வெள்ளத்தில் ஆனந்தன் மயங்கி கிடந்த நிலையில், கீழே வந்த மூவரும் பிற தொழிலாளர்களிடம் அவர் கால் இடறி விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆனந்தனை மீட்ட தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வேளச்சேரி காவல் துறையினர், ஆனந்தனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சக்திவேல், பிரசாந்த், சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
விசாரணையின் போது மூவரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் பதில் அளித்ததால், நிகழ்விடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அக்காட்சியில், ஆனந்தன் கீழே விழுந்த பின்னர், சாவகாசமாக தரைத்தளத்திற்கு வந்த மூவரும், ஆனந்தனின் வாயில் மதுபானம் ஊற்றுகின்றனர். இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கட்டிட தொழிலாளியான ஆனந்தன் தனது பணிகளை சிறப்புடன் செய்வது வழக்கம். மேலும், கூடுதல் வேலைகள் கொடுத்தாலும் அதனை தட்டிக்கழிக்காமல் செய்து வந்துள்ளார். இதனால் மேஸ்திரி ஆறுமுகம் ஆனந்தனுக்கு கூடுதலாக ரூ.100 சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிற 2 நண்பர்களும் ஆனந்தனிடம் நீ எதற்காக வேலைகளை சரியாக செய்கிறாய்? அப்படி செய்யாதே என கூறியுள்ளனர். இதற்கு ஆனந்த தனது தரப்பு நியாய பதில்களை தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த நண்பர்கள் ஆனந்தனை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, கொலையாளிகள் சக்திவேல், பிரசாந்த், சீனிவாசன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.